/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ஜன.,5 ல் மாரத்தான் ஓட்ட போட்டி
/
சிவகங்கையில் ஜன.,5 ல் மாரத்தான் ஓட்ட போட்டி
ADDED : ஜன 01, 2025 07:37 AM
சிவகங்கை : சிவகங்கையில் ஜன., 5 அன்று மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்ட போட்டி நடைபெற உள்ளது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணாதுரை மாரத்தான் ஓட்டம் ஜன., 5 அன்று காலை 6:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் வயது 17 முதல் 25 பிரிவு மாணவர்களுக்கு 8 கி.மீ., துாரம், மாணவிகளுக்கு 5 கி.மீ., துாரம், 25 வயதிற்கு மேற்பட்ட மாணவருக்கு 10 கி.மீ., துாரம், மாணவிகளுக்கு 5 கி.மீ., துாரம் போட்டி நடக்கும். இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களின் உடல் தகுதி சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்களில் வயது சான்று பெற்று வர வேண்டும்.
ஆதார், அடையாள அட்டையுடன் வரவும். 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிறப்பு சான்று, ஆதார் கார்டு நகலுடன் பங்கேற்கவும். இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடம் பிடிப்போருக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000, நான்கு முதல் பத்தாம் பரிசாக தலா ரூ.1,000 வழங்கப்படும். மேலும் விபரம் வேண்டுவோர் விளையாட்டு அலுவலரை 74017 03503 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.