ADDED : நவ 18, 2024 07:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடியில் மாணவர் தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடந்தது.
அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரி, கோவிலுார் ஆண்டவர் உடற்கல்வியில் கல்லுாரி சார்பில் மாரத்தான் ஓட்டம் நடந்தது.
அழகப்பா பல்கலை துணைவேந்தர் கே.ரவி துவக்கி வைத்தார். முன்னாள் துணை வேந்தர் எஸ்.சுப்பையா, வித்யாகிரி கல்வி குழும தாளாளர் சுவாமிநாதன் பங்கேற்றனர். இந்த மாரத்தான் ஓட்டம் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சிறுவர்கள் என 4 பிரிவுகளாக நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.