ADDED : ஜன 17, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை தமிழிசைப் பள்ளி கலைக்கழகம் சார்பில் மார்கழி சங்கமம் இசை நிகழ்ச்சி ஜமீன்தார் சோமநாராயணன் தலைமையில் நடந்தது. கலைக் கழக செயலாளர் லட்சுமணன் வரவேற்றார். கந்த சஷ்டி விழா கழக தலைவர் வீரப்பன் முன்னிலை வகித்தார். பாடகிகள் காரைக்குடி நீலாயதாட்சி, பிரேமி, நீடாமங்கலம் சாமிநாதன் வயலின், மதுரை ஜெகதீஷ் அரவிந்த் மிருதங்கம் குழுவினர் கச்சேரி நடந்தது. பொருளாளர் சேவுகன் நன்றி கூறினார்.
லயன்ஸ் பட்டய தலைவர் தட்சிணாமூர்த்தி தொகுத்து வழங்கினார்.