ADDED : ஜூலை 19, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: நெற்குப்பை பேரூராட்சியில் 131 குடும்பங்களை பொது நிகழ்ச்சி,கோயில் விழாக்களில் ஒதுக்கி வைத்து நடத்தப்படுவதாகவும், அதற்கு வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் துணை போவதாகவும் கூறி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க். கம்யூ. மாவட்ட செயலாளர் மோகன் உரையாற்றினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி தலைமை வகித்தார். நெற்குப்பை பொறுப்புச் செயலாளர் சக்திவேல், கிளைச் செயலாளர் பிரபு முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், வீரபாண்டி, கருப்புசாமி, முத்துராமலிங்க பூபதி, சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட கிராமத்தினர் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கிராமத்தினர் தனித்தனியாக நடவடிக்கை எடுக்க கோரி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர்.