/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மீண்டும் ரோட்டை ஆக்கிரமித்து சந்தை: வாகன ஓட்டிகள் தவிப்பு
/
மீண்டும் ரோட்டை ஆக்கிரமித்து சந்தை: வாகன ஓட்டிகள் தவிப்பு
மீண்டும் ரோட்டை ஆக்கிரமித்து சந்தை: வாகன ஓட்டிகள் தவிப்பு
மீண்டும் ரோட்டை ஆக்கிரமித்து சந்தை: வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : பிப் 14, 2025 07:14 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் சந்தைக்கு இடங்கள் இருந்தும் ரோட்டிலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், விபத்தும் நேரிடுகிறது.
திருப்புவனத்தில் செவ்வாய் தோறும் சந்தை நடைபெறும். சிவகங்கை ரோட்டில் சந்தை நடந்த போது அடிக்கடி விபத்து நடப்பதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதால் சந்தை சேதுபதி நகர் எதிரே உள்ள காலி இடத்திற்கு மாற்றினர்.
போக்குவரத்து நெரிசல் இன்றி சந்தை நடந்து வந்தது.
திருப்புவனம் சந்தைக்கு மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து பொருட்களை விற்பனை செய்தனர்.
கடந்த சில வாரங்களாக மீண்டும் மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வியாபாரிகள் கடைகள் அமைத்து ரோட்டிலேயே வியாபாரம் செய்கின்றனர்.
பொருட்களை ரோட்டில் பரப்பி வைப்பதுடன் அதனை வாங்க வரும் மக்களும் ரோட்டிலேயே நிற்பதால் டூவீலர் கூட செல்ல முடியவில்லை.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், இரண்டாயிரம் மாணவிகள் படிக்கும் பெண்கள் பள்ளி, தனியார் பள்ளி என ஏராளமானவை உள்ள நிலையில் ரோட்டிலேயே சந்தை நடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் ரோட்டில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

