ADDED : மார் 14, 2024 03:47 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்; திருப்புத்துார் ஒன்றியம் புதுக்காட்டாம்பூர் முத்தையா மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் சீனர்களின் பாரம்பரிய தாய்ச்சி கலை பயிற்சி முகாம் நடந்தது.
முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். தாய்ச்சி கலை பயிற்சியாளர் மாஸ்டர் கணேசன் சீனர்களின் பழமையான தற்காப்பு கலையான தாய்ச்சி கலை குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். இதன் மூலம் மன வலிமை, உடல்வலிமை, ஆரோக்கி வாழ்க்கை பெறுவது குறித்து பேசினார்.
ஆசிரியர்கள் பொன்முத்து, சரவணன், மாணிக்க நாச்சியார் ஒருங்கிணைத்தனர். துறை தலைவர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.
