ADDED : பிப் 01, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நுாலக இயக்கம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவில் பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சியில் எஸ்.பி., அர்விந்த் தலைமையில் போலீசார் கலந்துகொண்டனர்.
பயிற்சி எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி. சிபிசாய் செளந்தர்யன் வரவேற்றார். வாசித்தலின் முக்கியத்துவம் பற்றியும், புத்தகங்களினால் இந்த சமூகத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் எஸ்.பி., அர்விந்த் பேசினார்.
நிகழ்ச்சியில் போலீசார் உட்பட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.