ADDED : ஆக 20, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலநெட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் தெய்வேந்திரன்.
இவர் மாணவர்களுக்கு முறையாக பாடம் கற்பிக்காததால் கணித பாடத்தில் அனைத்து மாணவர்களும் குறைந்த மதிபெண் பெற்றதாகவும், காரணமின்றி மாணவர்களை அடிப்பதாகவும், பள்ளியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் கூறி, கடந்த 2 நாட்களுக்கு முன் அவரை பணியிட மாற்றம் செய்யக்கோரி கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கிராமத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று கணித ஆசிரியர் தெய்வேந்திரனை சஸ்பெண்ட் செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
