தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மயிலாடுதுறை-காரைக்குடி ரயில்

 மயிலாடுதுறை-காரைக்குடி ரயில்

 மயிலாடுதுறை-காரைக்குடி ரயில்


ADDED : மார் 08, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: மயிலாடுதுறை-காரைக்குடி இடையே 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப் படுவதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மயிலாடுதுறைக்கும் காரைக்குடிக்கும் இடையே ரயில் சேவை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. மீட்டர் கேஜ் ரயில் பாதையில் ரயில் இயங்கிய போது பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், கிராமப்புற மக்கள், வணிகர்கள் என பலரும் பயனடைந்து வந்தனர்.

தவிர தஞ்சாவூரில் புதுக்கோட்டை, திரு வாரூர் பகுதியில் உள்ள பழமையான கோயில்கள் செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததோடு, குறைந்த கட்டணத்தில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வந்தது.

மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப் பட்டதால் ரயில் இயக்கப் படவில்லை. இந்த ரயிலை மீண்டும் இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள், ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மயிலாடுதுறை- காரைக்குடி ரயில் இயக்கப் படும் என ரயில்வே நிர் வாகம் அறிவித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மார்ச் 11ம் தேதி திருச்சியில் நடை பெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி இந்த ரயிலை தொடங்கி வைக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us