/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செட்டிநாடு கல்லுாரிக்கு பதக்கம்
/
செட்டிநாடு கல்லுாரிக்கு பதக்கம்
ADDED : ஜன 01, 2026 05:37 AM

காரைக்குடி: செட்டிநாடு வேளாண் கல்லுாரி மாணவ மாணவிகள் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான கோல் ஷார்ட் பால் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றனர்.
நேபாளத்தில் 2025ம் ஆண்டிற்கான தெற்காசிய கோல் ஷாட் பால் போட்டி நடந்தது. இதில் செட்டிநாடு வேளாண் கல்லூரி இரண்டாமாண்டு மாணவர் ஜோசிந்த் ராபிக் கண்ணன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், மூன்றாம் ஆண்டு மாணவி சரண்யா திருச்சியில் நடந்த தேசிய அளவிலான கோல் ஷாட் பால் போட்டியில், தமிழக அணியில் விளையாடி தங்கப்பதக்கம் பெற்றார். பதக்கம் பெற்றவர்களை இந்திய கோல் ஷாட் பால் சங்க நிறுவனர் நோட்லா ராஜேந்திர பிரசாத், பொருளாளர் ராம்பர்வேஷ் குமார், தமிழ்நாடு கோல் ஷாட் பால் சங்க கருணாகரன் வாழ்த்தினர்.

