நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி மாநகராட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாசன் ஐ கேர் சார்பில் இரண்டு நாள் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இதில் ரத்தப் பரிசோதனை, சர்க்கரை நோய், கண் பரிசோதனை நடைபெற்றன.
துவக்க விழாவில், மாநகராட்சி மேயர் முத்துத்துரை முகாமை தொடங்கி வைத்தார்.
ஆணையாளர் சித்ரா, மாநகர் நல அலுவலர் திவ்யா கலந்து கொண்டனர். டாக்டர்கள். அனிதா, ஆஷா, கீர்த்தி தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில், 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.