நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்தூர் ஒன்றியம் கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் மண்டபத்தில் காரைக்குடி ரோட்டரி சங்கம், கோவிலுார் காணல் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், செட்டிநாடு டாக்டர் குமார ராணி மீனா முத்தையா மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
டாக்டர்கள் அகிலா, சசிரேகா மருத்துவ பரிசோதனை செய்தனர். ஏற்பாட்டினை காரைக்குடி ரோட்டரி சங்கத் தலைவர் எல்.எம்.லெட்சுமணன், செயலர் ஏ.அடைக்கப்பன், சமூக சேவை இயக்குனர் என்.பாலசுப்ரமணியன் செய்தனர்.

