ADDED : ஜன 21, 2026 05:40 AM

அ நிறம் | அளவு
காரைக்குடி: அமராவதிப் புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில்,நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி, சாக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் முத்துவேல், சிவக்குமார் கலந்து கொண்டனர்.
சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரி செயலர் சாரதேஸ்வரி பிரியா, ராமகிருஷ்ண பிரியா,முதல்வர் சிவசங்கரி ரம்யா, இயக்குனர் மீனலோச்சனி கலந்து கொண்டனர். எலும்பு, மருத்துவம், இதயம், நரம்பியல், காது, மூக்கு தொண்டை உட்பட 17 துறை சார் மருத்துவ பரிசோதனை, சிகிச்சை நடைபெற்றது.
