தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மருத்துவ சான்றிதழ் பாடப்பிரிவு தகுதி பட்டியல் வெளியீடு

மருத்துவ சான்றிதழ் பாடப்பிரிவு தகுதி பட்டியல் வெளியீடு

மருத்துவ சான்றிதழ் பாடப்பிரிவு தகுதி பட்டியல் வெளியீடு


ADDED : செப் 17, 2025 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2025 03:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை : மருத்துவ சான்றிதழ் பாடப்பிரிவுக்கான தகுதி பட்டியல் வெளிடப்பட்டுள்ளதாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் சீனிவாசன் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் 2025=-26ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் காலியாக உள்ள மயக்க மருந்து டெக்னீசியன் 18, தியேட்டர் டெக்னீசியன் 19 இடங்கள் மாவட்ட அளவில் நிரப்புவதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதிப்பட்டியல் www.gsmch.ac.in வலைத்தளத்திலும் கல்லுாரி அறிவிப்பு பலகையிலும் வெளியிடப் பட்டுள்ளது.

தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் தங்களது அசல் மற்றும் சான்றிதழ் நகல்களுடன் செப்.20க்குள் அல்லது அதற்கு முன்னதாகவே மருத்துவக் கல்லுாரி முதல்வர் அலுவலகத்தை அணுகி சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us