sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குடிநீர் வராத மீனாட்சி நகர்: மக்கள் அவதி

/

குடிநீர் வராத மீனாட்சி நகர்: மக்கள் அவதி

குடிநீர் வராத மீனாட்சி நகர்: மக்கள் அவதி

குடிநீர் வராத மீனாட்சி நகர்: மக்கள் அவதி


ADDED : ஆக 22, 2025 10:00 PM

Google News

ADDED : ஆக 22, 2025 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மீனாட்சி நகர் சாஸ்திரி 5 வது தெருவில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 6 மாதங்களுக்கு முன்பு நகராட்சி வழங்கும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. அப்பகுதி மக்கள் நகராட்சியிடம் புகார் அளித்துள்ளனர். அதை சரி செய்வதற்காக குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்து சரிசெய்யும் பணியை செய்தனர். அப்போது துண்டிக்கப்பட்ட இணைப்பு தற்போது வரை சரிசெய்யப்படவில்லை. 6 மாதங்களாக மக்கள் குடிதண்ணீர் இன்றி சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், சாஸ்திரி 5 தெருவில் செல்லக்கூடிய குழாய் சேதம் அடைந்துள்ளது. அவற்றை மாற்ற நகராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி பெற்று டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுத்த வாரத்திற்குள் குழாய்கள் மாற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றனர்.






      Dinamalar
      Follow us