/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
/
சிவகங்கையில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
ADDED : ஜன 18, 2024 05:57 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தமிழக முன்னாள் முதல்வர்எம்.ஜி.ஆர்., 107வது பிறந்த நாளை முன்னிட்டு பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன், நகர செயலாளர் ராஜா, ஜெ. பேரவை மாநில துணைச் செயலாளர் தமிழ்செல்வன்,தகவல் தொழில்நுட்ப பிரிவுமண்டல தலைவர் கோபி, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, அருள் ஸ்டீபன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணை தலைவர்வக்கீல் ராஜா, நகர் அவைத் தலைவர் பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
*தேவகோட்டையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. செந்தில்நாதன் அலுவலகம், நகர அ.தி.மு.க., சார்பில் பஸ் ஸ்டாண்ட் சமீபம், சங்கரபதிகோட்டை எம்.ஜி.ஆர்.சிலை ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.ஜி. ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சியினர், பொதுமக்கள், வி.ஏ.ஓ.க்கள் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ், நகர செயலாளர் ராமச்சந்திரன், வி.ஏ.ஓ. சங்க நிறுவனர் போசு, காசிநாதன், வடிவேலு, இலக்கிய பிரிவு கவிஞர் முத்துராமலிங்கம், கட்சி நிர்வாகிகள் வடிவேல்முருகன், சிங்கமுகம், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* இளையான்குடி நகர அ.தி.மு.க., சார்பில் நகரச்செயலாளர் நாகூர் மீரா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்துல் குலாம், அபுபக்கர், சையது இப்ராஹிம், அப்பாஸ் அலி, மவுலானா, செய்யது, மீரான்கனி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இளையான்குடி ஒன்றியசெயலாளர்கள் பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், கோபி ஆகியோர் தலைமையில் கொடியேற்றி, படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* காரைக்குடியில் நகரச் செயலாளர் மெய்யப்பன் தலைமையில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கற்பகம்,உமாதேவன், ஒன்றியச் செயலாளர் செந்தில்நாதன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் சின்னதுரை, நகராட்சி கவுன்சிலர்கள், ஆகா.பிரகாஷ், குருபாலு ராம்குமார், அமுதா மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.