/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி பல்கலையில் தினை ஆண்டு கருத்தரங்கு
/
காரைக்குடி பல்கலையில் தினை ஆண்டு கருத்தரங்கு
ADDED : பிப் 13, 2024 06:54 AM
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை.,மேலாண்மை நிறுவனம் சார்பில் இந்திய சமூக அறிவியல்ஆராய்ச்சி கழக நிதி உதவியுடன் சர்வதேச தினை ஆண்டு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆரோக்கியமான உணவு பழக்கம், நிலையான விவசாயம்,பொருளாதார வளர்ச்சி ஊக்குவிப்பு தினை வகைகளை சந்தைப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து நடந்த பயிலரங்கத்தில் பதிவாளர் செந்தில் ராஜன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை., சிறுதானிய துறை தலைவர் சிவக்குமார் பேசினார்.
மதுரை தான் அறக்கட்டளை பழனிச்சாமி மற்றும் சந்திரசேகரன் தினைகளின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தானியங்களை புத்துயிர் அளிப்பது, சந்தைப்படுத்துதல் குறித்து பேசினர். ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் வரவேற்றார்.