தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கனிம வளங்கள் எடுத்து செல்லலாரியில் ஜி.பி.எஸ்.,கருவி   அக்.,1 முதல் நடைச்சீட்டு ரத்து   

கனிம வளங்கள் எடுத்து செல்லலாரியில் ஜி.பி.எஸ்.,கருவி   அக்.,1 முதல் நடைச்சீட்டு ரத்து   

கனிம வளங்கள் எடுத்து செல்லலாரியில் ஜி.பி.எஸ்.,கருவி   அக்.,1 முதல் நடைச்சீட்டு ரத்து   


ADDED : செப் 25, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை, செப். 26-சிவகங்கை மாவட்டத்தில் கருங்கல், கிராவல் குவாரிகளில் இருந்து கனிமங்களை எடுத்து செல்ல இது வரை 250 லாரிகளில் மட்டுமே ஜி.பி.எஸ்., கருவி பொருத்தியுள்ளனர். மாவட்ட அளவில் கடந்த ஆட்சியில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் கருங்கல் எடுக்கவும், கிராவல், மணல் குவாரிக்கு கனிம வளத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. அக்கால கட்டத்தில் கனிம பொருட்களை எடுத்து செல்ல நடைச்சீட்டு முறைப்படி மாவட்ட அளவில் 1,200 லாரிகள் வரை இயக்கப்பட்டன. தொடர்ந்து குவாரிகளில் ஏற்பட்ட விபத்து காரணமாக புதிதாக வந்த த.வெ.க., அரசு விதிப்படி குவாரிகளை இயக்குவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தியது.

மாவட்ட அளவில் தற்போது கிரஷர் மற்றும் கிராவல் குவாரிகளுக்கு 5 பேர் மட்டுமே உரிய அனுமதி பெற்று அள்ளி செல்கின்றனர். இவர்களிடம் தற்போது 415 லாரிகள் வரை ஓடுகின்றன. ஒவ்வொரு லாரிகளும் கிராவல் எடுத்து செல்ல இ- நடைச்சீட்டு பெறுவது கட்டாயம். இதற்காக, கனிம வள சட்டப்படி ஒவ்வொரு லாரியும் ஏ.ஐ.எஸ்., 140 ரக ஜி.பி.எஸ்., கருவிகளை பொருத்தி தான் கிரஷர், கிராவல் மண் எடுத்து செல்ல வேண்டும். இது வரை இம்மாவட்டத்தில் 250 லாரிகளுக்கு மட்டுமே ‛ஜிபிஎஸ்.,’ கருவி பொருத்தி, சிவகங்கை கனிம வள உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இன்னும் 165 லாரிகளில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்படவில்லை. * ஜி.பி.எஸ்., கருவிக்கு தான் நடைசீட்டு: இது குறித்து சிவகங்கை கனிம வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது, கனிமத்தை எடுத்து செல்லும் லாரிகளில் செப்., 30 க்குள் அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஜி.பி.எஸ்., கருவி மட்டுமே பொருத்த வேண்டும். அக்., 1 முதல் கருவி பொருத்தாத லாரிகளுக்கு ஆன்லைனில் நடைச்சீட்டு வழங்கப்படமாட்டாது என்றனர். //

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us