/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பொங்கல் பரிசு தொகை குறித்து முதல்வர் அறிவிப்பார் சொல்கிறார் அமைச்சர் பெரியகருப்பன்

ADDED : ஜன 03, 2024 10:40 PM
சிவகங்கை:''பொங்கல் பரிசு தொகை எவ்வளவு என்பதை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்'' என சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகை எவ்வளவு என்பதை முதல்வர் ஸ்டாலின் தான் அறிவிப்பார். அதே போன்று ஜன., மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை பொங்கலுக்கு முன்னரே வழங்கப்படும்.
கடந்த ஆண்டு போலவே பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதற்கான நடைமுறை பின்பற்றப்படும். அதில் ஒரு கரும்புக்கு ரூ.33 ல் ஏற்று, இறக்கு கூலி தவிர்த்து கரும்புக்குரிய கொள்முதல் விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறதா என்பதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தான் உறுதி செய்ய வேண்டும்.
சிவகங்கையில் வேலுநாச்சியார் பெயரில் மகளிர் போலீஸ் பயிற்சி நிலையம் திறப்பது குறித்து காங்., எம்.பி., கார்த்தி, முதல்வரிடம் வைத்த கோரிக்கையை அவரும் ஏற்றுள்ளார். முதல்வர் சிவகங்கைக்கு வரும்போது அதுகுறித்து அவரிடமே கேட்டு கொள்ளுங்கள் என்றார்.