ADDED : நவ 30, 2024 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே இணைப்புச் சாலை பணியை முழுமையாக முடிக்காததால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் மதுராபுரி ஊராட்சியில் இருந்து அணைக்கரைப்பட்டி கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து இச்சாலை குறிப்பிட்ட சில கி.மீ., துாரத்திற்கு போடப்பட்டது.
ஆனால் மதுராபுரி விலக்கில் இருந்து ஒரு கி.மீ., துாரச்சாலை போடப்படாமல் விடப்பட்டது. இதனால் சாலையை சீரமைத்தும் பயனில்லாமல் உள்ளது.
எஞ்சிய சாலை பணியையும் சீரமைத்து பயன்பாட்டு கொண்டுவர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.