ADDED : நவ 19, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 13 வயது மாணவர். இவரது தந்தை சென்னையில் ஓட்டலில் பணிபுரிகிறார். தாய், மூத்த சகோதரருடன் மாணவர் சிவகங்கையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறார்.
நேற்று (நவ.,18) பள்ளிக்கு காலை 8:15 மணிக்கு சென்ற மாணவர் மாலை வீடு திரும்பாததால் பெற்றோர் தாலுகா போலீசில் இரவு 9:00 மணிக்கு புகார் அளித்தனர்.
போலீஸ் விசாரணையில் மாணவர் பள்ளிக்கு வராததது தெரிந்தது. சி.சி.டிவி., கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் நண்பர்கள் வீடுகளில் விசாரித்தனர். இன்று (நவ.,19) மதியம் 2:00 மணிக்கு சிவகங்கையில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் மாணவர் தங்கியிருந்தது தெரிந்தது. அவரை மீட்டு விசாரித்த போது பெற்றோர் கண்டித்ததால் நண்பர் வீட்டிற்கு சென்றதாக கூறினார்.
