/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பால் உற்பத்தியாளர்களுக்கு பணம்; கலெக்டர் பொற்கொடி நடவடிக்கை
/
பால் உற்பத்தியாளர்களுக்கு பணம்; கலெக்டர் பொற்கொடி நடவடிக்கை
பால் உற்பத்தியாளர்களுக்கு பணம்; கலெக்டர் பொற்கொடி நடவடிக்கை
பால் உற்பத்தியாளர்களுக்கு பணம்; கலெக்டர் பொற்கொடி நடவடிக்கை
ADDED : ஜூலை 30, 2025 10:02 PM
சிவகங்கை; காரைக்குடி ஆவினுக்கு பால் கொள்முதல் செய்யும், உற்பத்தியாளருக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை பணம் பட்டுவாடா, ஊக்கத்தொகையை மாதந்தோறும் வழங்க வேண்டும் என ஆவின் நிர்வாகத்திற்கு கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.
காரைக்குடி ஆவின் பாலகத்தில், தினமும் 50 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆவின் பூத்களில் விற்பனை போக எஞ்சிய பாலை சென்னைக்கும், நெய், பால்கோவா உள்ளிட்ட துணை பொருட்களை தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
காரைக்குடி ஆவினில் பால் உற்பத்தியை இன்னும் அதிகரிக்கும் நோக்கில் 90 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள கலன் அமைத்துள்ளனர். காரைக்குடி ஆவின் பாலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார். தரமான பால் கொள்முதலை அதிகரிக்கவும், தேசிய பால்வள பெருக்கு திட்டத்தின் கீழ் பால் கொள்முதல் செய்யப்பட்ட பால் தர பரிசோதனை கருவிகளை முறையான பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு தடையின்றி 10 நாட்களுக்கு ஒரு முறை பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.
அதே போன்று அரசு வழங்கும் பாலுக்கான ஊக்கத்தொகையை மாதந்தோறும் வினியோகம் செய்ய வேண்டும் என ஆவின் நிர்வாகத்திற்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது ஆவின் பொது மேலாளர் ராஜசேகர், உதவி பொது மேலாளர் நாச்சியப்பன், மேலாளர் ஸ்ரீமதி, துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) திவ்யபிரீத்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.