/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் நாய் கடித்ததால் 20க்கும் மேற்பட்ட கோழிகள் பலி
/
மானாமதுரையில் நாய் கடித்ததால் 20க்கும் மேற்பட்ட கோழிகள் பலி
மானாமதுரையில் நாய் கடித்ததால் 20க்கும் மேற்பட்ட கோழிகள் பலி
மானாமதுரையில் நாய் கடித்ததால் 20க்கும் மேற்பட்ட கோழிகள் பலி
ADDED : டிச 08, 2024 06:11 AM

மானாமதுரை : மானாமதுரை பழைய தபால் ஆபீஸ் தெருவில் 20க்கும் மேற்பட்ட கோழிகளை கடித்து கொன்ற நாய்கள், பள்ளி சிறுவர், சிறுமிகளையும் கடிப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் உள்ள தெருக்களில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். காலை நேரங்களில் நடைபயிற்சிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களையும் விரட்டி, விரட்டி கடிப்பதினால் தினந்தோறும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஏராளமானோர் வருகின்றனர்.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் நாய்களை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மானாமதுரை பழைய தபால் ஆபீஸ் தெரு முனீஸ்38, கூறுகையில்,
மானாமதுரை பழைய தபால் ஆபீஸ் தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. நேற்று வழி விட்டான் என்பவர் வளர்த்து வந்த 20 கோழிகளை நாய்கள் கடித்து கொன்றன. நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.