நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் அருகே மாந்தாளி கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முனீஸ்வரர் கோவில் திடலில் மஞ்சுவிரட்டு நடந்தது.
முன்னதாக கோவில் காளையை கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்து அவிழ்த்தனர். பின்னர் ஆங்காங்கே பொட்டலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 70க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டது. மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் காளைகளை அடக்க முயன்றனர். அடங்கிய காளைகளின் துண்டுகளை வீரர்கள் அவிழ்த்து சென்றனர். மணியுடன் வரக்கூடிய காளைகளை அடக்கி வீரர்கள் காளையின் உரிமையாளர்களிடம் மணியை ஒப்படைத்து அதற்கான பரிசுத் தொகையை பெற்றனர்.