காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், புதுவயலை சேர்ந்தவர் ராஜாமணி; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு அகிலேஷ், 12; ஷிவானி, 10; யாழ்மொழி, 4; ஆகிய குழந்தைகள் இருந்தனர்.
நவ., 10ல் தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டது. ராஜாமணி ஆட்டோவில் ராமேஸ்வரத்திற்கு சவாரி சென்று விட்டார். விரக்தியில் இருந்த சித்ரா, மாலை குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்ததும், பூச்சி மருந்தை தானும் குடித்து, தன் மூத்த மகன், மூத்த மகளுக்கும் கொடுத்தார்.
கடைசி மகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். சித்ரா தகவல்படி, வீட்டுக்கு வந்த ராஜாமணி, உயிருக்கு போராடிய மூவரையும் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
சித்ரா நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். நேற்று ஷிவானி இறந்தார். அகிலேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற் று வருகிறார். சாக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

