/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி நான்கு சாலை சந்திப்பில் தடுப்பால் திணறும் வாகன ஓட்டிகள்
/
காரைக்குடி நான்கு சாலை சந்திப்பில் தடுப்பால் திணறும் வாகன ஓட்டிகள்
காரைக்குடி நான்கு சாலை சந்திப்பில் தடுப்பால் திணறும் வாகன ஓட்டிகள்
காரைக்குடி நான்கு சாலை சந்திப்பில் தடுப்பால் திணறும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 18, 2024 12:02 AM

காரைக்குடி : காரைக்குடி செக்காலை நான்கு சாலை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
காரைக்குடி கல்லுாரி சாலை, அண்ணா நகர், செக்காலை, கழனிவாசல் செல்லும் சாலை ஆகிய நான்கு சாலை சந்திப்பு நகரின் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த நான்கு சாலை சந்திப்பில் கல்லூரி செல்லும் சாலையில் மட்டும் தடுப்பு இருந்தது.
இந்நிலையில், போக்குவரத்து போலீசார் செக்காலை ரோடு தொடங்கி கல்லூரி சாலைக்கு திரும்பும் சாலையில் இருந்த தடுப்புகளுடன் புதிதாக 'எல்' வடிவில் தடுப்பு அமைத்துள்ளனர்.
கல்லூரி சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், அண்ணாநகர் கழனிவாசல் செல்வதற்கு 'எல்' வடிவ தடுப்பினை தாண்டி சாலையின் நடுவே வாகனங்களை திருப்ப முடியாமல் திணறி வருகின்றனர். வாகனங்களை திருப்பும் போது எதிரே வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும், கனரக வாகனங்கள் பள்ளி பஸ்கள், வேன்கள் உள்ளிட்டவை கல்லூரி சாலை அண்ணா நகருக்கு நேரடியாக செல்ல முடியாமல் விதிமுறைகளை மீறி வலதுபுற சாலையை பயன்படுத்த வேண்டி உள்ளது.
இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.