UPDATED : செப் 22, 2026 05:03 PM
ADDED : செப் 22, 2026 04:11 AM
காரைக்குடி:காரைக்குடி அருகே உள்ள தளக்காவூரில் சகதிக்காடாக காட்சியளிக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டதாக இருந்த தளக்காவூர் ஊராட்சி காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தெற்கு தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு தார்ச் சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளைக் கடந்த நிலையில் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் பாலம் அமைக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டு மீண்டும் சேதமானது.
தற்போது மழை பெய்து வரும் நிலையில் சாலை முழுவதும் மழை நீர் தேங்கி சகதிக் காடாக காட்சி அளிக்கிறது. வயதானவர்கள் நடக்க முடியாமல் சிரமப்படுவதோடு வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
