/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரிமண்டபத்தில் முளைப்பாரி உற்ஸவம்
/
அரிமண்டபத்தில் முளைப்பாரி உற்ஸவம்
ADDED : அக் 02, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை; மானாமதுரை அருகே அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பு கிராமத்தில் நடைபெற்ற முளைப்பாரி உற்ஸவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகே அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பு கிராமத்தில் உள்ள சுந்தரவல்லி, அய்யனார் கோவிலில் கடந்த வாரம் கிராம மக்கள் காப்பு கட்டி விரதத்தைதுவக்கினர்.
முளைப்பாரி ஓடுகளில் நவதானியங்களை விதைத்து நன்றாக முளைத்தவுடன் கோயில் முன்பாக வைத்து கும்மி பாட்டு, ஒயிலாட்டம் ஆடி சுவாமியை வழிபட்டனர். தினமும் இரவு 9 சட்டிகளில் பிரசாதம் எடுத்து வந்து சுவாமிக்கு படைத்தனர்.
ஏராளமானவர்கள் முளைப்பாரியை எடுத்து ஊர்வலமாக சென்றனர்.