ADDED : டிச 22, 2025 06:25 AM

தேவகோட்டை: தேவகோட்டையில் பா.ஜ., சார்பில் முருகன் கோயில்களை ஒன்றிணைத்து முருக பக்தர்கள் விழா நடந்தது.
பா.ஜ., நகர் தலைவர் முத்துகருப்பன் தலைமை வகித்தார். முருக பக்தர்கள் வேல் எடுத்துச் சென்று தேவகோட்டை நகரில் உள்ள தண்டாயுதபாணி மலைக் கோயில், தி.ராம., சாமி கோயில், அழகிய சுந்தர வேலாயுத தண்டாயுதபாணி கோயில், வெற்றி வேல் முருகன் கோயில், கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய ஆறு கோயில்களுக்கு சென்று அங்குள்ள முருக பெருமானை பூஜை செய்து வழிபட்டனர். நிறைவாக பாலமுருகன் கோயில் வேல் கொண்டுவரப்பட்டு அபிஷேகம் நடந்தது. முருக பெருமான் விக்ரகத்தில் வேல் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்தனர். சாரதா மடம் யதீஸ்வரி, சாரதேஸ்வரி, சொக்கநாதபுரம் ஐயப்பா சுவாமிகள், சின்ராஜ், பிரபு, முன்னாள் தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க., கவுன்சிலர் அய்யப்பன், பா.ஜ., நிர்வாகிகள் காசிராஜா, கார்த்திகேயினி பங்கேற்றனர்.
