sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆட்டிறைச்சி விலை அதிகரிப்பு

/

ஆட்டிறைச்சி விலை அதிகரிப்பு

ஆட்டிறைச்சி விலை அதிகரிப்பு

ஆட்டிறைச்சி விலை அதிகரிப்பு


ADDED : மே 18, 2025 12:18 AM

Google News

ADDED : மே 18, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் அசைவ விருந்து அதிகரிப்பின் காரணமாக இறைச்சி விலை தொடர்ச்சியாக உயர்ந்த வருகிறது.

திருமணம், காதணி விழா, புதுமனை புகுவிழா என தமிழகத்தில் முகூர்த்த நாட்களில் விசேஷங்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும் வைகாசி பிறந்த நிலையில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான முகூர்த்த நாட்கள் ஞாயிறு விடுமுறை நாட்களில் வருவதால் விசேஷங்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் விசேஷங்களில் குறிப்பிட்ட சமூகத்தை தவிர மற்றவர்கள் சைவ விருந்து தான் வழங்குவர். அசைவத்திற்கு என தனியாக நாள் குறித்து இரு தரப்பு வீட்டார் மட்டுமே பங்கேற்பார்கள்.

சமீப காலமாக திருமணம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களிலும் அசைவ விருந்தே பிரதானமாக விளங்கி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் வட்டாரத்தில் தான் அதிகளவு கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. திருப்புவனம் வட்டாரத்தில் மணல்மேடு, பெத்தானேந்தல், அல்லிநகரம், கீழடி, கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரத்து 615 செம்மறியாடுகளும், 21 ஆயிரத்து 372 வெள்ளாடுகளும் உள்ளன.

வாரம்தோறும் திருப்புவனத்தில் நடைபெறும் செவ்வாய்கிழமை சந்தையில் ஆயிரம் முதல் ஆயிரத்து 500 ஆடுகள் வரை விற்பனையாகின்றன. பத்துகிலோ எடை கொண்ட ஆடு ஏழாயிரம் ரூபாயில் இருந்து எட்டாயிரத்து 500 ஆக உயர்ந்து விட்டது.

திருப்புவனத்தில் நடைபெறும் சந்தைக்கு இறைச்சி ஆடுகள் வாங்க கேரளா, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்துஅதிகளவு வியாபாரிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் குறைந்த பட்சம் 50 சரக்கு வாகனங்களில் இறைச்சி ஆடுகள் ஏற்றி செல்லப்படுகின்றன.






      Dinamalar
      Follow us