/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் நகரத்தார் காவடிகள்
/
காரைக்குடியில் நகரத்தார் காவடிகள்
ADDED : ஜன 18, 2024 06:00 AM

காரைக்குடி : தைப்பூசத்தையொட்டி பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார் காவடிகள் நேற்று நகர்வலம் வந்தனர்.
தைப்பூச விழாவிற்கு நகரத்தார்கள் காவடிகள் துாக்கி பழநிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். கடந்த 400 ஆண்டுகளாக இதனை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். காவடிகளுடன் பாதயாத்திரையாக சென்று மீண்டும் பாதயாத்திரையாக திரும்புவர்.
காரைக்குடி, கண்டனுார், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நகரத்தார்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக, குன்றக்குடி வந்தடைவர். குன்றக்குடியில் சிறப்பு பூஜைகளை முடித்து நாளை
பாதயாத்திரையை தொடங்குகின்றனர். ஜன.27ம் தேதி காவடி செலுத்தும் நிகழ்வு நடைபெறும். நேற்று காரைக்குடியில் நகரத்தார் காவடிகள் நகர்வலம் வந்தனர்.
நகரச்சிவன் கோயிலில் இருந்து புறப்பட்டு, முத்து மாரியம்மன் கோயில் செக்காலை சிவன் கோவில் டி.டி நகர் விநாயகர் கோவில், கொப்புடைய நாயகி அம்மன் கோயிலை வந்தடைந்து இரவு சிலம்பணி பிள்ளையார் கோயிலில் தங்கி இன்று காலை குன்றக்குடிக்கு புறப்படுகின்றனர்.