/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாகூர் ஹஸ்ரத் சாகுல் ஹமீது தர்கா சந்தனக்கூடு விழா
/
நாகூர் ஹஸ்ரத் சாகுல் ஹமீது தர்கா சந்தனக்கூடு விழா
ADDED : ஜன 03, 2024 06:07 AM

தேவகோட்டை: தேவகோட்டை மகான் நாகூர் ஹஸ்ரத் சாகுல் ஹமீது ஒலியுல்லா 92வது ஆண்டு சந்தனக்கூடு விழா கடந்த டிச.14ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிச.31 வரை தினமும் மாலையில் மவ்லத்து ஓதி ஹத்தம் செய்யப்பட்டது.
தினமும் ஏராளமானோர் தர்கா வந்து வழிபட்டு சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் தின்னப்பச் செட்டியார் ஊருணி பகுதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக நாட்டிய குதிரைகளுடன் வாத்திய இசை முழங்க சந்தனக்கூடு வலம் வந்து தர்காவை வந்தடைந்தது.
நேற்று மாலை 5:00 மணியளவில் பகல் சந்தனக்கூடு மணிமுத்தாறு சென்று மீண்டும் தர்காவை வந்தடைந்தது. கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வழிபட்டனர்.