/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேசிய தரச்சான்று நிபுணர்கள் குழு ஆய்வு
/
தேசிய தரச்சான்று நிபுணர்கள் குழு ஆய்வு
ADDED : மார் 27, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தேசிய தரச்சான்று நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது. இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கக்கூடியது. இந்த மருத்துவமனை18 படுக்கை வசதியுடன் செயல்படுகிறது.
தினசரி 100க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், நாய் கடி தடுப்பூசி, பாம்பு கடிக்கு விஷ முறிவு ஊசி அளிக்கப்படுகிறது. மாரடைப்பு முதலுதவி, அவசர மருத்துவ பெட்டகம் இங்கு உள்ளது. இந்த மருத்துவமனையில் தேசிய தரச்சான்று நிபுணர்கள் குழுவிலுள்ள டாக்டர் மினிமோலா, தேர்வாளர் வஜராபு இந்திரா குழுவினர் ஆய்வு செய்தனர்.