/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேசிய பேரிடர் மீட்பு குழு சிவகங்கைக்கு வருகை
/
தேசிய பேரிடர் மீட்பு குழு சிவகங்கைக்கு வருகை
ADDED : அக் 14, 2024 09:03 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், அப்பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்புவனம், சிங்கம்புணரி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. சிங்கம்புணரி பாலாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கடந்த 16 ஆண்டிற்கு முன் ஏற்பட்ட சேதம், இம்முறையும் நேரிடாமல் இருக்க, மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்பு குழுவை சிவகங்கைக்கு அனுப்பியுள்ளது. இதற்காக அரக்கோணம் 4 வது பட்டாலியனில் இருந்து பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்துள்ளனர். இன்று காலை கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் இக்குழுவினர், வருவாய்துறையினர் குறிப்பிடும் பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். அதேபோன்று பலத்த மழை காலங்களில் பாதிப்பில்இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் தோறும் இக்குழுவினர் சென்று, செயல்முறை விளக்கம் அளிக்க உள்ளனர்.
////