ADDED : நவ 21, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அரசு நுாலகத்தில் தேசிய நுாலக வார விழா நடந்தது.
வாசகர் வட்ட நிர்வாகி ஜெகநாதன் தலைமை வகித்தார். நுாலகர் சூரத் சங்கர் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் பெரியார் தொடங்கி வைத்தார். முன்னாள் வங்கி மேலாளர் சபாரத்தினம், ஆசிரியர்கள் பேசினர்.
நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு ராம்நகர் பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்தார். கவிஞர்கள் அரவரசன், முத்துராமலிங்கம், குமார், டாக்டர் ஜெயக்குமார், ஆசிரி யர்கள் பங்கேற்றனர்.

