UPDATED : நவ 19, 2026 05:00 PM
ADDED : நவ 19, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட நுாலகத்தில் தேசிய நுாலக வார விழா நடந்தது.
நுாலகர் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அறிவொளி தலைமை வகித்தார். சார்பு நீதிபதி அனிதா கிறிஸ்டி, மாவட்ட மைய நுாலகர் வெங்கடவேல் பாண்டி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சம்பத் குமார் நுாலக சேவை குறித்து பேசினார். எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய பூமிக்கு யாரும் பாரமில்லை நுாலை நீதிபதி வெளியிட, வழக்கறிஞர் சங்க செயலாளர் சித்திரைசாமி பெற்றார். நுாலக நண்பர்கள் திட்ட உறுப்பினர் ரமேஷ்கண்ணன், கோவிந்தன், அனந்தராமன், விஜயகுமார் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களிடம் வாசிப்பை நேசிக்க செய்யும் நோக்கில், புத்தகம் மற்றும் நுாலக உறுப்பினர் அட்டையை நீதிபதி வழங்கினார். ///
