நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் அண்ணாத்துரை முழுநேர கிளை நுாலகத்தில் தேசிய நுாலக வார விழா நடந்தது.
எழுத்தாளர் கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். கிளைநுாலகர் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார். மாணவிகள் 'வள்ளுவம் சொல்லும் கல்வியில் சிறப்பு' என்ற தலைப்பில் பேசினர்.
தாளாளர் விக்டர், பேராசிரியர் சாம்ராஜ், பேச்சாளர் மெய்யாண்டவர் பாராட்டினர்.

