/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டிச.13ல் தேசிய மக்கள் நீதிமன்றம்
/
டிச.13ல் தேசிய மக்கள் நீதிமன்றம்
ADDED : டிச 10, 2025 09:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் டிச.13 அன்று காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்கு, காசோலை மோசடி வழக்கு, உரிமையியல் வழக்கு, குடும்ப பிரச்னை குறித்த வழக்கு, தொழிலாளர் பிரச்னை குறித்த வழக்கு, சமரச குற்ற வழக்குகளுக்கு தீர்வு கண்டு பயனடையலாம் என சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா தெரிவித்தார்.

