ADDED : அக் 11, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் நடந்த தேசிய தபால் வார விழாவில் முதல் சேமிப்பில் ஈடுபட்ட குழந்தைகளுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
தேசிய தபால் வார விழாவை முன்னிட்டு சிறு குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, தபால் நிலையத்தில் கணக்கு துவக்கிய குழந்தைகளுக்கு என் முதல் சேமிப்பு என்ற பாராட்டு சான்றினை, கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் வழங்கினார்.
மேலும், பனங்குடி, கல்லல், ஏரியூர், நெட்டூர், கட்டிக்குளம், மேலராங்கியம் கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு காப்பீடுகள், இதர சேமிப்பு கணக்குகள் துவக்கப்பட்டன. ஆதார் திருத்த சேவை நடந்தது. இதில், ஏராளமானவர்கள் பயனடைந்தனர்.