/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளான் வளர்ப்பு, மருத்துவ குணம் குறித்த தேசிய கருத்தரங்கம்
/
காளான் வளர்ப்பு, மருத்துவ குணம் குறித்த தேசிய கருத்தரங்கம்
காளான் வளர்ப்பு, மருத்துவ குணம் குறித்த தேசிய கருத்தரங்கம்
காளான் வளர்ப்பு, மருத்துவ குணம் குறித்த தேசிய கருத்தரங்கம்
ADDED : மார் 18, 2025 05:56 AM

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை விலங்கு நலன் மற்றும் மேலாண்மை துறை சார்பில் காளான் வளர்ப்பு மற்றும் அதன் மருத்துவ குணங்கள் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
பூஞ்சை தொற்றுகளின் தாக்கம் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் விலங்குகள் நலன் மற்றும் மேலாண்மை துறை தலைவர் வசீகரன் வரவேற்றார். அழகப்பா பல்கலை துணை வேந்தர் ரவி சுகாதார பராமரிப்பில் பூஞ்சைகளின் முக்கியத்துவம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் பேசினார்.
அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா பூஞ்சை ஆராய்ச்சியின் தற்போதைய பங்களிப்பு குறித்து பேசினார். பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் செல்வம் பூஞ்சை பன்முகத்தன்மை, மறு சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பற்றிய கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்து பேசினார்.
கருத்தரங்கில் விஞ்ஞானிகளின் கலந்துரையாடல் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் நித்யா எழுதிய 'பூஞ்சை எல்லை என்ற தலைப்பிலான தொடரும் மின் புத்தகம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. அழகப்பா பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் பழனிச்சாமி பேசினார். எம். எஸ்., பல்கலை பேராசிரியர் செந்தில்நாதன் பேசினார்.