ADDED : ஆக 21, 2025 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீத பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா ஆக. 9ம் தேதி துவங்கியது. மலையில் இருந்து குதிரை வாகனத்தில் கிளம்பிய சுவாமி மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி மானாமதுரை வழியே 24 நாள் வலம் வந்து பின்னர் திருக்கூடல் மலைக்கு சென்றடைவார்.
வழியில் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படியில் எழுந்தருளும் நவநீத பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
நேற்று முன்தினம் இரவு நவநீத பெருமாள் மானாமதுரை,தாயமங்கலம் ரோட்டில் உள்ள முருகன் கோயில், வைகைக்கரை அய்யனார் சோனையா சுவாமி கோயிலுக்கு எழுந்தருளினார்.