/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் இன்று நவராத்திரி விழா
/
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் இன்று நவராத்திரி விழா
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் இன்று நவராத்திரி விழா
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் இன்று நவராத்திரி விழா
ADDED : அக் 03, 2024 04:38 AM
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் இன்று மாலை நவராத்திரி விழா துவங்குகிறது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதர் கோயிலில் நவராத்திரி விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா இன்று துவங்கி அக்., 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
விழா நாட்களின் போது அம்மன் சன்னதி முன்பாக ஆனந்தவல்லி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரம், மகிஷாசுரமர்த்தினி,சிவபூஜை செய்தல் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
விழாவை முன்னிட்டு கோயிலின் உள் வளாகத்திலும்,வெளி வளாகத்திலும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. கொலுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.