தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ என்.சி.சி., மாணவர்களுக்கு '‛‛ட்ரோன்' பயிற்சி அளிக்கப்படும்

 என்.சி.சி., மாணவர்களுக்கு '‛‛ட்ரோன்' பயிற்சி அளிக்கப்படும்

 என்.சி.சி., மாணவர்களுக்கு '‛‛ட்ரோன்' பயிற்சி அளிக்கப்படும்


ADDED : ஏப் 26, 2026 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 11:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி: ''விக்சித் பாரத் 2047யை இலக்காக வைத்து என்.சி.சி., மாணவர்களுக்கு ட்ரோன், சைபர் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்'' என என்.சி.சி., தலைமை இயக்குனர் தருண் நாருலா தெரிவித்தார்.

காரைக்குடியில் என்.சி.சி., பட்டாலியன் ஆய்வுக்காக வந்த அவர் கூறியதாவது:

விக்சித் பாரத் 2047 இலக்கை நோக்கி செயல்படுகிறோம். அதன் அடுத்தகட்டமாகவே என்.சி.சி., மாணவர்களுக்கு ட்ரோன், சைபர் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்றைய மாணவர்கள் மனதளவில் கூர்மை, சுறுசுறுப்பாக உள்ளனர். இதற்கு முறையான உடல் தகுதி அவசியம். அவர்களை முழுமையான ஆளுமையாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம். 2025 நவம்பரில் தனுஷ்கோடியில் கடலோர காவல் படை, கடற்படை, ராணுவத்துடன் இணைந்து பயிற்சிகளை நடத்தினோம். மாணவர்கள் ஆர்வமுடன் என்.சி.சி.,யில் சேர வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us