/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நேரு யுவகேந்திரா மாவட்ட விளையாட்டு போட்டி
/
நேரு யுவகேந்திரா மாவட்ட விளையாட்டு போட்டி
ADDED : ஜன 05, 2025 11:59 PM

சிவகங்கை; சிவகங்கை அருகே ஒக்கூரில் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது.
நேரு யுவகேந்திரா எனது பாரதம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில தலைவர் எஸ்.செந்தில்குமார் தலைமை வகித்தார்.
நேரு இளைஞர் நற்பணி மன்ற தலைவர் அன்பழகன் வரவேற்றார். மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார்.
தென்றல் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் எம்.ஹரிஹரன், புனித மைக்கேல் பாலிடெக்னிக் முதல்வர் என்.மகேந்திரன், நேதாஜி இளையோர் கழக தலைவர் சரவணன், யோகா டிரஸ்ட் மற்றும் சுவாமி விவேகானந்தா இளையோர் கழக இயக்குனர் யோகநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், பா.ஜ., சார்பில் பிரதிநிதி பாலமுருகன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், சான்றுகள் வழங்கினர். திட்ட உதவியாளர் எஸ்.ராஜேஸ்வரி நன்றி கூறினார்.