ADDED : மார் 20, 2024 12:05 AM
சிவகங்கை : ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சிவகங்கை வட்டார வள மையம், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2023 --24ன் கீழ் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வு 70 மையங்களில் நடந்தது. இந்த தேர்வில் 15 வயதுக்கும் மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத கற்போர் தேர்வு எழுதினர்.
தேர்வினை  தலைமையாசிரியர் மற்றும் தன்னார்வலர் நடத்தினர். தமறாக்கி தெற்கு எழுத்தறிவு மையத்தை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் நாகராஜ முருகன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து பார்வையிட்டனர்.  வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு ரூபாராணி, வட்டாரக் கல்வி அலுவலர் பாலாமணி, ஆசிரியர் பயிற்றுநர்கள் செந்தில்குமார், பாண்டிச்செல்வி, சதீஷ் உடனிருந்தனர். ஏற்பாட்டினை தமறாக்கி தெற்கு பள்ளித் தலைமையாசிரியர் வளர்மதி, குமாரபட்டி தலைமையாசிரியர் செல்வமலர் செய்தனர்.

