/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் புதிய பஸ்கள் துவக்கம்
/
திருப்புத்துாரில் புதிய பஸ்கள் துவக்கம்
ADDED : டிச 17, 2025 05:31 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில் மகளிர் விடியல் பயணத்திற்கான இரண்டு புதிய பஸ்கள், புதிய வழித்தடத்தை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.
திருப்புத்துாரிலிருந்து கொத்தமங்கலம், பொன்னமராவதி ஆகிய 2 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த பழைய பஸ்களுக்கு மாற்றாக புதிய பஸ்களுக்கான இயக்கத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.
மேலும் திருப்புத்துாரிலிருந்து 2ஏ என்ற அரசு மகளிர் பஸ் சிராவயல் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி காரைக்குடி, கானாடுகாத்தான், குமாரராணி மருத்துவமனை வழியாக கொத்தமங்கலம் செல்லும் புதிய வழித்தடத்தை துவக்கினார்.
பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, துணை தலைவர் கான்முகமது, முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சண்முகவடிவேலு, பேரூராட்சி கவுன்சிலர் ராஜேஸ்வரி, அரசு போக்குவரத்துக்கழக துணை மேலளார்கள் நாகராஜன், தமிழ்மாறன், கிளை மேலாளர் அறிவரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

