/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மஞ்சுவிரட்டுக்கு புதிய நடைமுறை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை திட்டம்
/
மஞ்சுவிரட்டுக்கு புதிய நடைமுறை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை திட்டம்
மஞ்சுவிரட்டுக்கு புதிய நடைமுறை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை திட்டம்
மஞ்சுவிரட்டுக்கு புதிய நடைமுறை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை திட்டம்
ADDED : டிச 19, 2025 05:23 AM
காரைக்குடி: மஞ்சுவிரட்டை, ஜல்லிக்கட்டு விதிமுறைகளின் படி நடத்த வேண்டும் என்று பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால், மஞ்சுவிரட்டுக்கு என புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
காரைக்குடியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் சிவகங்கை மாவட்ட மஞ்சுவிரட்டு பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன் கூறுகையில்:
சிவகங்கை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் மஞ்சு விரட்டு நடந்து வருகிறது. 2017-ல் ஜல்லிக்கட்டிற்கு புரட்சி ஏற்பட்டு, சட்டம் இயற்றப்பட்டது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுவிடு விழா, வடமாடு என 4 வகைகளாக வகைப்படுத்தப்பட்டது.
விதிமுறைகளும் வலுவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மஞ்சுவிரட்டை, ஜல்லிக்கட்டு விதிமுறைகளின் படி நடத்த வேண்டும் என்று பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மஞ்சுவிரட்டாக இல்லாமலும், ஜல்லிக்கட்டாக இல்லாமலும் நடைபெற்று வருகிறது. இதனால் மஞ்சுவிரட்டு நடத்துபவர்கள் சொல்ல முடியாத கஷ்டத்தில் உள்ளனர். வரும் 2026ல் சிராவயல், மஞ்சுவிரட்டில் இருந்து சிவகங்கை மாவட்ட மஞ்சுவிரட்டு குழு, மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து மஞ்சுவிரட்டிற்கு என
விதிமுறைகளில் மாற்றம் செய்து மஞ்சுவிரட்டுக்கு பொருத்தமான விதிமுறைகளை அமைத்து, அரசிடம் வழங்க உள்ளோம்.
முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பாரம்பரிய முறைப்படி மஞ்சுவிரட்டு நடத்த முயற்சி எடுத்து வருகிறோம் என்றனர்.

