
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணவர்களிடம் வாசிப்பு திறன் அதிகரிக்க வேண்டும் --------------------------------------------------------------
மு.சொக்கலிங்கம், தலைவர், விவேகானந்தா கல்வி அறக்கட்டளை கும்மங்குடி: கல்வியைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில், வளர்ச்சியே காணப்பட்டது. கல்லுாரி மாணவிகளுக்கு அரசின் உதவித்தொகை உதவியாக இருந்தது எனலாம். மத்திய அரசின் உதவித்தொகையுடன் 'அப்ரென்டிஸ்' தொழில்நுட்ப பயிற்சிக்கான புதிய முயற்சியும் பாராட்டத்தக்கதே. வேலைக்கான வாய்ப்பை அதிகரிக்கும். தற்போது சமூக ஊடகங்களில் மூழ்கும் மாணவ,மாணவியர்களிடம் வாசிப்புத்திறன் குறைவாகி விட்டது. இதனால் எழுதுவதற்கு சிரமப்படுகின்றனர்.
அதை வரும் ஆண்டில் மாற்றிக் கொள்ள வேண்டும். புத்தகத்தில் வாசிப்பது மனதில் நிற்கும். அலைபேசி,சமூக ஊடகங்கள் பயன்பாட்டை மாணவ சமுதாயம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.