/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆங்கிலப் புத்தாண்டு சர்ச்களில் கொண்டாட்டம்
/
ஆங்கிலப் புத்தாண்டு சர்ச்களில் கொண்டாட்டம்
ADDED : ஜன 02, 2025 04:59 AM
தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகர் பங்கு உலக மீட்பர் சர்ச்சில் புத்தாண்டு விழா பங்கு பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் நடந்தது. திருச்சி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் பாதிரியார் லியோ திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஆற்றினார்.
* தேவகோட்டை  பங்கு சகாய அன்னை சர்ச்சில் பங்கு பாதிரியார் அருள் சந்தியாகு  தலைமையில் பங்கு உதவி பாதிரியார்  ஸ்டீபன் கடந்தாண்டிற்கு நன்றி திருப்பலியும், புத்தாண்டு வரவேற்பு சிறப்பு திருப்பலியும் நடத்தினார்.
* தேவகோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் சர்ச்சில் போதகர் சாராள் சமாதானம் ஜெயம் தலைமையில்  திருப்பலி நடந்தது.
* புளியால் பங்கில் புளியால் புனித பெரியநாயகி அன்னை சர்ச்சில்  பங்கு பாதிரியார் அம்புரோஸ் தலைமையில்  நன்றி திருப்பலியும், புத்தாண்டு வரவேற்பு திருப்பலியும் நடந்தது.

