/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நுாலகத்தில் புத்தாண்டு சந்திப்பு
/
நுாலகத்தில் புத்தாண்டு சந்திப்பு
ADDED : ஜன 09, 2024 12:02 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் முழு நேர கிளை நுாலகத்தில் எழுத்தாளர்கள், வாசகர்கள்,இளையோர் உரையரங்கம், புத்தாண்டு சந்திப்பு நடந்தது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் புவனேஸ்வரன் தலைமை வகித்தார். வாசகர் வட்டத்தலைவர் ஜெயச்சந்திரன், எழுத்தாளர் கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். நல்நுாலகர் மகாலிங்கம்ஜெயகாந்தன் வரவேற்றார்.
மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், ஆதரவற்ற பெண்கள், கைம்பெண்கள் நல வாரிய உறுப்பினர் ரேவதி அழகர்சாமி, பேராசிரியை ஹேமமாலினி, தலைமையாசிரியர்கள் கருப்பையா, சேவுகமூர்த்தி, கவிஞர் பரம்பு நடராஜன், உதவி பேராசிரியர் சாம்ராஜ் வாழ்த்தினர்.
'புத்தாண்டில் ஒரு சபதம்' என்ற தலைப்பில் இளையோர் உரையாடல்நடந்தது. ஆபி.சீ.அ.கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். புதிய புரவலராக ஆசிரியர் அறிவரசன்இணைந்தார். உதவியாளர்கள் குணசேகரன்,நாராயணன் ஒருங்கிணைத்தனர். கோவிந்தராஜன் நன்றி கூறினார்.